1 |
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/100001.mp3
|
وَالْعَادِيَاتِ ضَبْحًا |
2 |
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், |
/content/ayah/audio/hudhaify/100002.mp3
|
فَالْمُورِيَاتِ قَدْحًا |
3 |
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- |
/content/ayah/audio/hudhaify/100003.mp3
|
فَالْمُغِيرَاتِ صُبْحًا |
4 |
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், |
/content/ayah/audio/hudhaify/100004.mp3
|
فَأَثَرْنَ بِهِ نَقْعًا |
5 |
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- |
/content/ayah/audio/hudhaify/100005.mp3
|
فَوَسَطْنَ بِهِ جَمْعًا |
6 |
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/100006.mp3
|
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ |
7 |
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/100007.mp3
|
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ |
8 |
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/100008.mp3
|
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ |
9 |
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- |
/content/ayah/audio/hudhaify/100009.mp3
|
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ |
10 |
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- |
/content/ayah/audio/hudhaify/100010.mp3
|
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ |
11 |
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். |
/content/ayah/audio/hudhaify/100011.mp3
|
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ |