Al-Alaq

Change Language
Change Surah
Change Recitation

Tamil: Jan Turst Foundation

Play All
# Translation Ayah
1 (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
2 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
3 ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
4 அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
5 மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
6 எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَى
7 அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, أَن رَّآهُ اسْتَغْنَى
8 நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
9 தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? أَرَأَيْتَ الَّذِي يَنْهَى
10 ஓர் அடியாரை - அவர் தொழும்போது, عَبْدًا إِذَا صَلَّى
11 நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى
12 அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், أَوْ أَمَرَ بِالتَّقْوَى
13 அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா, أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى
14 நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى
15 அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
16 தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
17 ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். فَلْيَدْعُ نَادِيَه
18 நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். سَنَدْعُ الزَّبَانِيَةَ
19 (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ
;